Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயலட்சுமி வழக்கு! சீமானுக்கு நாளை வரை கெடு! இல்லாவிட்டால் கைது? - சம்மனை கிழித்த நாதக!

Advertiesment
விஜயலட்சுமி வழக்கு! சீமானுக்கு நாளை வரை கெடு! இல்லாவிட்டால் கைது? - சம்மனை கிழித்த நாதக!

Prasanth Karthick

, வியாழன், 27 பிப்ரவரி 2025 (13:34 IST)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கில் சீமான் ஆஜராக நாளை வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உறவு வைத்துக் கொண்டதுடன், பலமுறை கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

 

அவர் ஆஜராகாத நிலையில் அவர் ஆஜராக 4 வார கால அவகாசம் கேட்டு அவரது வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் சீமான் நாளை காலை 11 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரும் எனவும் காவல்துறை சீமான் வீட்டிற்கு சம்மன் அனுப்பி சுவற்றில் ஒட்டியுள்ளனர். ஆனால் அதை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு..!