Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான அரசியல் சூழலில் விஜயகாந்த் மோடிக்கு கடிதம்..

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (17:43 IST)
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. (காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது ). நாட்டில் 14வது பிரதமராக  இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று முந்தினம் மாலை பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் அப்போது பதவியேற்றுக்கொண்டார்கள்.
நேற்று காலையில் மத்திய  அமைச்சரவையில் இடம்பெற்றவரக்ளுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பிரதமராகப் பதவியேற்ற மோடி நாட்டின் பாதுகாவலர்களுக்கும் , மாணவ மாணவிகளும் ( கல்வி உதவிதொகை உயர்வு ) முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
 
இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில்  கலந்து கொள்ள தமிழகத்தில் முதலமைச்சர், துணை முதல்வர் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் மனஸ்தாபப் பட்டதாக தகவல்கள் வெளியானது.( கடந்த முறை மோடி பதவியேற்றபோது விஜயகாந்த் , பிரேமலதா விஜயகாந்த் விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது )
 
இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் ஓய்வெடுத்துவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் , பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பிரதமர் மோடிக்குக் கடிதன் எழுதியுள்ளார்.
 
அதில் கூறியுள்ளதாவது :
 
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு  வாழ்த்துக்கள்...புதிய அரசு நாட்டில் வறுமையை ஒழித்து பொருளாதார வளர்ச்சியில் சாதிக்கும் என நம்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.மக்கள் விருப்பங்களை நிறைவேற்றி ஊழலற்ற நிர்வாகத்தை பிரதமர் வாங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments