Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மி - முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வாழ்த்து!!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (08:47 IST)
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு. 

 
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளில் மக்கள் பலர் பணத்தை இழந்து வருவதும், பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.
 
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் சரியானதாக இல்லை என மீண்டும் வலுவான சட்டம் அமைக்குமாறு கூறி ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சூதாட்ட செயலிகளை தடை செய்வதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளது.
 
இந்நிலையில் சூதாட்ட செயலிகளை தடை செய்வதற்கு சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
இதைடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,  தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை இன்றைய இளைஞர்களும், பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
 
இதற்கிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments