Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Advertiesment
MK Stalin
, சனி, 11 ஜூன் 2022 (11:34 IST)
நாளை உலக குழந்தை தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் பிரச்சினை இன்னமும் தொடர்ந்து வருகிறது. முன்னதாக போர்கள் காரணமாக கைவிடப்பட்ட குழந்தைகள் உலகளவில் அதிகளவில் குழந்தை தொழிலாளர்களாக ஆக்கப்பட்டார்கள். தற்போது இந்த நிலை அகதிகளாக மாறும் மக்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

உலக அளவில் பார்க்காமல் உள்ளூர் அளவிலும் பார்த்தால் கூட பல்வேறு பகுதிகளில் குடும்ப வறுமை, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கவும் பல நாடுகளும் முயன்று வருகின்றன. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை தொழிலாளர் குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளை கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை அரசு அனுமதிக்காது. குழந்தைகளை கொண்டாடுவோம். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RRB தேர்வுகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!