Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கந்தசஷ்டி கவசம் படித்த கேப்டன் விஜயகாந்த்: வைரலாகும் வீடியோ

கந்தசஷ்டி கவசம் படித்த கேப்டன் விஜயகாந்த்: வைரலாகும் வீடியோ
, திங்கள், 27 ஜூலை 2020 (07:40 IST)
கந்தசஷ்டி கவசம் படித்த கேப்டன் விஜயகாந்த்
சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து தவறான வகையில் விமர்சனம் செய்யபட்டது. இந்த விமர்சனத்திற்கு முருக பக்தர்கள் மட்டுமன்றி இந்துமத ஆதரவாளர்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்
 
மேலும் இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டதோடு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள மொத்தம் 500 வீடியோக்களும் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் தலைமை நிர்வாகத்திற்கு கிரைம் போலீசார் கடிதம் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:  வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
விஜயகாந்தின் இந்த வீடியோவும் டுவிட்டும் தற்போது வைரலாகி வருகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு மருத்துவமனையில் சேர 50 ரூபாய் லஞ்சம்! வைரலாகும் வீடியோ!