Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவை பயமுறுத்த விஜயகாந்த் செய்த தந்திரம்!

Advertiesment
அதிமுகவை பயமுறுத்த விஜயகாந்த் செய்த தந்திரம்!
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (09:54 IST)
விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் தான் இணையவுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அக்கட்சியால் நிச்சயம் திமுக கூட்டணிக்கு செல்ல முடியாது என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் திமுகவுக்கு செல்வது போன்ற பாவ்லாக்கள் அதிமுகவை பயமுறுத்தவே என்று கூறப்படுகிறது
 
நேற்று திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்திக்க வந்தது கூட தேமுதிகவின் தந்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 9 மக்களவை தொகுதிகள் கேட்டு வந்த தேமுதிகவுக்கு முதலில் இரண்டு தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறி பின் 4 தொகுதிகள் தர அதிமுக சம்மதம் தெரிவித்தது. ஆனால் 7 தொகுதிகளுக்கு குறையாமல் வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்த தேமுதிக, அதிமுகவை வழிக்கு கொண்டு திருநாவுககரசரை வரவழைத்து திமுக கூட்டணிக்கு செல்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது
 
webdunia
ஆனால் இந்த தந்திரம் அதிமுகவிடம் எடுபட்டதாக தெரியவில்லை. விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்பதால் தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதால் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றே அதிமுக கருதுகிறதாம். எனவே 4 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி இல்லையே வேண்டாம் என்றே அதிமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலினுக்கு எல்லாமே 'மாதிரி'தான்: அமைச்சர் உதயகுமார்