Publish Date: Mon, 29 Nov 2021 (15:52 IST)
Updated Date: Mon, 29 Nov 2021 (18:30 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் திமுக அமோக வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசியல் கட்சிகளும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை விநியோகிக்க துவங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தேமுதிக இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் டிசம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை அந்தந்ந மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.