கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் இனி சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உடனடி முன்பதிவு மூலமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் - காட்பாடி - சேலம் - கோவை வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. டிச. 3, 10 ,17, 24, 31, ஜன. 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.