Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்போடு இருப்போம்… தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!

Advertiesment
வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்போடு இருப்போம்… தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!
, சனி, 10 ஏப்ரல் 2021 (08:18 IST)
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள முகாம்களில் விழிப்புணர்வோடு பாதுகாப்பில் ஈடுபடுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு பாதுகாப்பாக வேட்பாளர்களின் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய தேமுதிகவினர், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி பலம், பண பலம், அதிகார பலத்தை தைரியத்துடன் எதிர்கொண்டு, தமிழகத்தின் எதிர்கால நலனை குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும் எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மே 2-ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்றுநம்புவோம்.’ எனக் கூறியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடிய நபர்… 40 சைக்கிள்கள் பறிமுதல்!