Publish Date: Mon, 20 Nov 2023 (10:40 IST)
Updated Date: Mon, 20 Nov 2023 (10:41 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மார்புசளியால் இடைவிடாது இருமல் இருந்து வந்ததன் காரணமாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
Mahendran
Publish Date: Mon, 20 Nov 2023 (10:40 IST)
Updated Date: Mon, 20 Nov 2023 (10:41 IST)