Publish Date: Sun, 25 Feb 2024 (07:00 IST)
Updated Date: Sun, 25 Feb 2024 (07:14 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விளவங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி திடீரென நேற்று டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அவர் பாஜகவில் இணைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் கட்சி தாவல் சட்டத்தின்படி விஜய்தரணியின் எம்எல்ஏ பதவியை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தனர். அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவியில் இருந்தும் விஜய் தரணி நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து விலகுவதாக விஜய்தரணி அறிவித்த நிலையில் தற்போது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.