Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயதரணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.! விஜய் வசந்த் ஆவேசம்..!!

Vijay Vasanth

Senthil Velan

, சனி, 24 பிப்ரவரி 2024 (16:30 IST)
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய துரோகம் செய்த விஜயதரணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
 
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தார். 

ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் விஜயதரணி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
 
விஜயதரணி பாஜகவில் இணைந்தது குறித்து காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த  விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் விஜய் வசந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"நான் மலாலா யூசுப் இல்லை".! காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கிறேன்.! யானா மீர்..