2021 ஆம் தேர்தலில் வாய்ஸ் அளிக்க விஜய் முடிவா? அதிர்ச்சித் தகவல்

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (21:07 IST)
கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக -தமாக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் அளித்தார். இந்த வாய்ஸ் காரணமாக அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் நடிகர் விஜய் வாய்ஸ் அளிப்பார் என்றும், அவர் ஆதரவு தெரிவிக்கும் கூட்டணிக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களை விட 2021 ஆம் ஆண்டு தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக இருக்கும். இதுவரை அதிமுக திமுக என இரண்டு கூட்டணிகள் மட்டுமே போட்டியிட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் புதியதாக தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்யும் வாய்ஸ் அளிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது 
 
விஜய் நிச்சயம் ரஜினிகாந்த்-பாஜகவுக்கு எதிராகத்தான் வாய்ஸ் அளிப்பார் என்றும் அதனால் அதிமுக அல்லது திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் அளிக்கப் போவது உறுதி என்று கூறப்பட்டாலும் அவர் யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாக அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தடையை மீறி நாளை போராட்டம்: இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு