Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் விலையில்லா உணவகம் - மக்களுக்கு உணவு அளிக்கும் விஜய் ரசிகர்கள்

Advertiesment
விஜய் விலையில்லா உணவகம் -  மக்களுக்கு உணவு அளிக்கும் விஜய் ரசிகர்கள்
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:36 IST)
விஜய் மக்கள் இயக்கத்தின் ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்கின்றனர். 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நிவாரண பணிகளும், மருத்துவ முகாம்களும் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் மழையால் பாதித்த சென்னை மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் உணவு அளித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
முன்னதாக முதல்வர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கிய நிலையில் பருமழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது- இபிஸ்