Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னியாக்குமரியில் விஜய் வசந்த்! – எதிர்த்து போட்டியிடும் பாஜக முன்னாள் எம்.பி?

கன்னியாக்குமரியில் விஜய் வசந்த்! – எதிர்த்து போட்டியிடும் பாஜக முன்னாள் எம்.பி?
, ஞாயிறு, 14 மார்ச் 2021 (15:02 IST)
கன்னியாக்குமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஹய் வசந்த் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் கன்னியாக்குமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் இறந்ததால் கன்னியாக்குமரி தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி உள்ளிட்டோர் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாக்குமரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் விஜய் வசந்துக்கு எதிராக பாஜக சார்பில் முன்னாள் மக்களவை எம்.பி பொன் ராதாகிருஷ்ணன் நிறுத்தப்படலாம் என்று பேசிக்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரம்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு