Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயதரணிக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி! பொன்னாருக்கு கவர்னர் பதவியா?

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (12:48 IST)
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த விஜயதரணி போட்டியிட போவதாகவும் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி திடீரென சமீபத்தில் பாஜகவில் இணைந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்க தற்போது திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது அநேகமாக அவரது ஆளுநர் பதவி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் விஜய் வசந்த் மற்றும் விஜயதாரணி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதக இருப்பதால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக கருதப்படும் என்று கூறப்படுகிறது


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை.! எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன்..!!

அண்ணன் ஜெயித்த தொகுதியில் தங்கை போட்டி.? காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்..!!

திடீரென கிளம்பிய வதந்தி செய்தி: ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை எச்சரிக்கை..

மதுபோதையில் உளறிய குடிமகன்.. விபச்சார விடுதியை கண்டுபிடித்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு..!

சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக அழைத்துச் சென்ற பெற்றோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments