Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி!

Advertiesment
MK Stalin

Sinoj

, புதன், 28 பிப்ரவரி 2024 (13:13 IST)
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
''கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை “ஆ’ பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் செல்வி.தர்ஷினி (வயது 13) தபெ.இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
 
உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அதுமாதிரி சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன்'' செய்தியாளரின் கேள்விக்கு திருநாவுக்கரசர் எம்பி காட்டம்!