Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

Advertiesment
நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

Siva

, ஞாயிறு, 26 ஜனவரி 2025 (16:00 IST)
நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது ஒரு பக்கம் தளபதி 69 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதோடு, இன்னொரு பக்கம் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த நிலையில், இன்று அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் "ஜனநாயகன்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் அவர் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாகவும், நான்கு நாட்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மாவட்டச் செயலாளர்களின் பணிகள் மற்றும் அவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நாளை பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். அதற்காக அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை அவர் என்ன முக்கிய ஆலோசனை செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!