இன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் குடியரசு தின வாழ்த்துக்களை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் ஆன உரிமைகளை நிலைநாட்ட தனி அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்த குடியரசு தினத்தில் அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து அனைவருக்கும் ஆன சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட அனைவருக்கும் மன வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது