Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

Advertiesment
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

Siva

, செவ்வாய், 4 மார்ச் 2025 (08:14 IST)
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக கட்சியின் தலைமை நிலைய செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
 ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. 
 
இதில் கழகத் தலைவர் அவர்கள், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம். ராயப்பேட்டை, சென்னைதேதி: 07.03,2025 வெள்ளிக்கிழமைநோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக மணி 6.24மக்ஃரிப் பாங்கு: மாலை, மணி 6.28மக்ஃரிப் தொழுகை: மாலை, மணி 6.35 (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக முதல்வர் தாயார் தாயார் தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி..!