பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்": பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு விஜய் நன்றி!

Mahendran
திங்கள், 23 ஜூன் 2025 (10:12 IST)
நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் தனது 'X' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும் கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்தனர்.
 
இந்த சூழலில், விஜய் தனது பதிவில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளை பொழிந்த திரைப்படத் துறை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. 
 
மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தில் நீங்கள் அளிக்கும் ஆதரவு மேலும் ஊக்கமளிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்து செல்வோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.
 
விஜய்யின் இந்த அறிக்கை, அவரது அரசியல் பயணத்தில் மக்களின் ஆதரவை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments