நடிகர் விஜயை கைது செய்யுங்கள்: எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

வியாழன், 8 நவம்பர் 2018 (08:43 IST)
சர்கார் படத்தில் அதிமுகவையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சித்து பேசிய நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு எண்ணற்ற உதவிகளையும், நலத்திட்டங்களையும் வாரி வழங்கும் அதிமுக அரசையும், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவையும் விமர்சித்து பேசிய  நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ஆம் ஆண்டு: மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்