Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

இன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ஆம் ஆண்டு: மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்

Advertiesment
பணமதிப்பிழப்பு
, வியாழன், 8 நவம்பர் 2018 (08:39 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு தொலைக்காட்சியில் பேசிய பாரத பிரதமர் நரேந்திரமோடி அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

வங்கியில் நீண்ட வரிசை, ஏடிஎம் செயலற்று போன தன்மை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பலர் மரணம், என இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் அவதியை சந்தித்தனர். அதே நேரத்தில் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள், கோடிக்கணக்கான கருப்புப்பணம் ஆகியவையும் இந்த நடவடிக்கையால் வெளியே தெரிந்தது என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தபோவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ஆம் ஆண்டு: மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்