Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

Advertiesment
2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி:  விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

Mahendran

, வெள்ளி, 28 மார்ச் 2025 (14:26 IST)
2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்  இடையே தான் போட்டி என விஜய் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டி இரண்டே இரண்டு கட்சிகளுக்குள் தான். ஒன்று தமிழக வெற்றிக் கழகம், இன்னொன்று திமுக. எல்லோரும் நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்!" என்று உறுதியுடன் தெரிவித்தார்.அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 "திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என்பதே விஜய்யின் பேராசை," என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை விமர்சித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "விஜய், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவ்வாறு பேசியிருக்கலாம். ஆனால், உண்மையான போட்டி அதிமுக மற்றும் திமுக இடையே தான் இருக்கும்," என்று கூறினார்.
 
திமுகவின் முக்கிய பிரமுகர்கள் இதற்கு பதில் கூறாமல் இருந்தாலும், அதிமுக தரப்பில் இருந்து வந்த எதிர்வினைகள் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக மாற்றியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!