Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவே இல்லை: திவ்யா சத்யராஜ்

Advertiesment
sathyaraj divya

Mahendran

, புதன், 5 பிப்ரவரி 2025 (11:16 IST)
சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக்கழகம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்யின் கட்சி குறித்து கேள்வி எழுப்பியபோது, "இதுவரை விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்த்ததே இல்லை. 1991-ஆம் ஆண்டிலேயே ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் வெற்றியை கண்டவர் அவர். 30 வருடங்களுக்குப் பிறகு கட்சி தொடங்கி, மாநாடு நடத்தி, சமூக பணிகளை தொடங்க வேண்டுமா? அவரது அரசியலை மதிப்பிட நான் ஒன்றுமில்லை" என்று அவர் பதிலளித்தார்.

திமுக மீது விஜய் ஊழல் குற்றச்சாட்டுக்களை விஜய் சுமத்துவது குறித்து கேட்டபோது, "திமுக உண்மையில் ஊழல் செய்ததா? அதை நிரூபிக்க சொல்லுங்கள். பொதுவாக எதையாவது சொல்வதற்கு அர்த்தமில்லை. இது வெறும் அவதூறு மட்டுமே" என்று கூறினார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களால் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும், இதனால் எதிர்க்கட்சிகள் வருத்தத்துடன் இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென நண்பர்களாக மாறிய கவர்னர் - முதல்வர்.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!