Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் விரக்தி! பிரபல யூட்யூபர் தம்பதி தற்கொலை!

Youtube couple suicide

Prasanth Karthick

, திங்கள், 28 அக்டோபர் 2024 (09:12 IST)

யூட்யூபில் விலாக் வீடியோக்கள் செய்து பிரபலமான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கேரள - தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு சேது என்ற மகனும், ப்ரீது என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் சேது கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 

கிணற்றுமுக்கில் தனியாக வசித்து வரும் செல்வராஜூம், பிரியாவும் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமையல் வீடியோ, தங்களது வீட்டு நிகழ்ச்சிகள், டான்ஸ் ரீல்ஸ் ஆகியவற்றை வெளியிட்டு பிரபலமடைந்தனர். சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள மகன் சேது தன் தாய், தந்தையை தொடர்பு கொள்ள முயன்றபோது ஃபோனை எடுக்கவில்லை.
 

 

அதனால் சேது தனது ஊருக்கே சென்று பார்த்தபோது செல்வராஜ் தூக்கில் தொங்கியும், பிரியா விஷம் குடித்தும் தற்கொலை செய்து வீட்டிலேயே பிணமாக கிடந்துள்ளனர். இதை கண்டு சேது அதிர்ச்சி அடைந்த நிலையில் சம்பவ இடம் விரைந்த போலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

யூட்யூபில் கிடைத்த பிரபல்யத்தால் அதிகமாக தம்பதியர் கடன் வாங்கி அதை கட்டமுடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் யூட்யூபிலும் அவர்களது வீடியோக்களுக்கு வரவேற்பு குறைந்ததுடன், நெகட்டிவ் கமெண்டுகளும் அதிகமானதால் மனம் உடைந்த நிலையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த.வெ.க மாநாடு: திருமாவுக்கு ரூட் போட்ட விஜய்..! பதிலுக்கு பா.ரஞ்சித் குடுத்த ப்ளூ சிக்னல்!