நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் நடிகர் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், ரசிகர்கள் அக்கட்சியில் இணைய வேண்டாம் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட புதிய கட்சிக்கு தலைவராக திருச்சியை சேர்ந்த பத்மநாபன் என்னும் ஏகே ராஜா நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஏ.கே.ராஜா மீது விஜய் ரசிகர் ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது தலைவர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக நீடிக்க உள்ளதாகவும் ஏ.கே.ராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் எஸ்.ஏ.சிக்கு எழுந்துள்ள நிலையில், பல விஜய் ரசிகர்கள் எஸ்.ஏ.சி கட்சியில் சேர தயங்குவதாகவும், விஜய்யின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத அவரது ரசிகர்கள் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள தயங்குவதாகவும் ரசிகர் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறதாம்