Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக-வை வீழ்த்துவது முக்கியமா, திமுக-வை வீழ்த்துவது முக்கியமா? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்: துரை வைகோ

Siva
ஞாயிறு, 8 ஜூன் 2025 (08:50 IST)
பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் சொல்கிறார். அதே நேரத்தில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் சொல்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டுமா? பாஜகவை வீழ்த்த வேண்டுமா? எதை முதலில் வீழ்த்த வேண்டும் என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
 
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  "விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதே நேரத்தில், அவர் 'கொள்கை எதிரியை வீழ்த்தத் தனியாக ஒரு அணியை உருவாக்கினால்', அது மறைமுகமாக பாஜகவுக்கு உதவுவது போல் ஆகிவிடும். அவர் மதவாத சக்திகள் வரக்கூடாது என்று எண்ணும் ஒத்த கருத்துடைய சக்திகளோடு பயணம் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
"யார் பெரிய எதிரி என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். எது பெரிய இலக்கு என்பதையும் அவர் முடிவு செய்ய வேண்டும். பாஜகவை வீழ்த்துவது முக்கியமா? திமுகவை வீழ்த்துவது முக்கியமா? என்பதை அவரே முடிவு செய்யட்டும்," என்றும் தெரிவித்தார்.
 
"விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், அவை எல்லாம் வாக்குகளாக மாறுமா? அரசியல் வேறு, சினிமா வேறு," என்றும் தெரிவித்தார்.
 
"விஜய் தனி அணியாக நின்றால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறி, பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதற்கு விஜய் இடம் கொடுக்கக் கூடாது," என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments