ஜூன் 13 வரை கொட்டப்போகுது மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 8 ஜூன் 2025 (08:40 IST)
ஜூன் 13ஆம் தேதி வரை தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகளிலும் புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜூன் 16ஆம் தேதி கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். 12ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
13ஆம் தேதி கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மீதம் உள்ள பகுதிகளில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும், சில இடங்களில் ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

அடுத்த கட்டுரையில்
Show comments