Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

Siva
திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (18:03 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி அறிந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தொலைபேசி வாயிலாக அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
 
ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஆர்.நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
 
நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நல்லகண்ணுவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
 
நல்லகண்ணு விரைவில் குணமடைய வேண்டும் என விஜய் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

கூலி வேலைக்கு சென்று வைரத்துடன் திரும்பும் தொழிலாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு..!

20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!

காதலனை பணத்திற்காக விற்ற காதலி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments