லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தல் வியூக நிறுவனத்திடம் விஜய் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு இந்த நிறுவனம் தான், விஜய்யின் தமிழக வெற்றி கழகக் கட்சிக்கு ஆலோசனை சொல்லும் என்று கூறப்படுகிறது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக நிறுவனங்களிடம் ஆலோசனை பெற்று தான் அரசியல் நடத்தி வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனம்தான் ஆலோசனை கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
										
			        							
								
																	இந்த நிலையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் தலைமையில் இயங்கும் தேர்தல் வியூக நிறுவனத்திடம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும், மேலும் அவரது கட்சியின் நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	 கடந்த முறை போலவே, இந்த முறையும் பிரசாந்த் கிஷோரிடம் திமுக ஆலோசனை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.