இந்தியாவில் மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தோனேசியாவில் அதானி குழுமம் வாங்கும் நிலக்கரியின் விலை நடுக்கடலில் திடீரென இரண்டு மடங்குகளாக உயர்வது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் மின் கட்டண உயர்வுக்கு முழுக்க முழுக்க அதானியே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.