உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறாரா விஜய்? – மன்ற நிர்வாகிகள் போட்டியிடுவதாக தகவல்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:24 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பல காலமாகவே பல்வேறு ஊகங்கள் இருந்து வருகின்றன. இதுவரையில் நேரடியாக விஜய் தனது அரசியல் பயணம் குறித்து தெரிவிக்காவிட்டாலும் அவரது படங்கள் அடிக்கடி அரசியல் பிரச்சினைக்கு உள்ளாவது, அவரை சுற்றி உள்ளவர்கள் அரசியல் குறித்து எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து விஜய் பெயரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகவே வைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பெயரை, மன்றத்தை தனது அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக தனது தாய், தந்தை உள்ளிட்ட 11 பேர் மீது விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை பரிசோதிக்கும் முயற்சியில் உள்ளாராம் நடிகர் விஜய்.

இதற்காக மன்ற நிர்வாகிகள் சிலரை சுயேட்சையாக போட்டியிட செய்யலாம் என்றும், அவர்கள் தங்கள் மன்ற கொடி மற்றும் விஜய் பெயரை பயன்படுத்த தடை இல்லை என்றும் வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மன்ற நிர்வாகிகளின் வெற்றி மற்றும் செயல்பாட்டை பொறுத்து அடுத்தக்கட்ட அரசியல் நகர்விற்கு விஜய் திட்டமிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments