Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு ஏடிஎம் மிஷினையும் உடைக்க முடியல..! – சுத்தியலோடு சரண்டர் ஆன கொள்ளையன்!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:52 IST)
சென்னையில் 6 இடங்களில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்று முடியாததால் தானாக போலீஸில் கொள்ளையன் சரண்டர் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் திருநின்றவூர் பகுதியில் தொடர்ந்து 6 ஏ.டி.எம் மையங்களை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 ஏடிஎம்களிலும் ஒரே ஆள்தான் கொள்ளையடிக்க முயன்றது என போலீஸார் கண்டறிந்து கொள்ளையனை தேடுவதற்குள், கொள்ளையனே சுத்தியலோடு வந்து போலீஸில் சரண்டர் ஆகியுள்ளான்.

விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சேஷாத்ரி என தெரிய வந்துள்ளது. தொழில் நஷ்டத்தால் அவர் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது மனரீதியான பாதிப்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மாணவிகளுக்கு கொரோனா: 2 பள்ளிகளை இழுத்து மூடிய நிர்வாகிகள்