Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு அளிக்க நாளையே கடைசி!

Advertiesment
Tamilnadu
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதியில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 15ம் தேதி முதலாக பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுவரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்புமனுக்களும் என 54,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் முக்கியமான கட்சிகள் தங்களது அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல்! – ஏமனில் 30 பேர் பலி!