தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் கரூர் சென்றிருந்தபோது நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விஜய்யின் பிரச்சார பேருந்து மற்றும் பிரசார வேன் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
விஜய்யின் பிரசார கூட்டத்தால்தான் 41 அப்பாவி உயிர்கள் பறிபோனதாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதே பிரச்சார பேருந்துக்கு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்காமல், பிரசார வாகனங்களுக்கு பூஜை செய்தது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.