விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூதாட்டிகள் இணைந்த நிலையில், அந்த கட்சியில் உள்ள இளைஞர்கள் வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் போது, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அப்போது ஏராளமானோர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கூட்டத்தில் வந்திருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு வந்து, தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்வதாக கூறினார்கள்.
அவர்களுக்கு கூட்டத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மூதாட்டிகளை வரவேற்ற கட்சியில் உள்ள இளைஞர்கள், "தமிழக மக்கள் மாற்று அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று," என்றும் "திராவிட இயக்க ஆட்சிகள் மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை" என்றும் கூறினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மூதாட்டிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராய் இணைந்த நிலையில், மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்," என்று கூறிய பாட்டிமார்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம் என்று கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.