தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் என விஜய் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் பேசிய நிலையில், தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று தான் என பிரேமலதா விஜயகாந்த் என்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதை அடுத்து, விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு கொடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றுதான், எங்கள் கட்சிதான் அதற்கு உதாரணம் என்று கூறினார். "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற பெயரிலேயே கட்சியின் பெயரில் தேசியமும் இருக்கிறது, திராவிடமும் இருக்கிறது, தமிழகமும் இருக்கிறது.
தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்பது எல்லோருக்கும் தெரியும்; தமிழ் படங்களில் மட்டுமே அடைந்தார், வேறு மொழி படங்களில் கேப்டன் நடிக்கவில்லை. "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என அத்தனை இடத்திலும் தமிழை பற்றி பேசியவர் கேப்டன்.
அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியையும் கற்போம்" என்றுதான் இளைஞர்களுக்கு கேப்டன் சொல்லிக் கொடுத்தார். எனவே, நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை; அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கிறது, திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை; இன்றல்ல, நீடித்து 100 ஆண்டுக் காலமாக இருக்கின்ற விஷயம். எனவே இனிமேல் அது பற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரேமலதா தெரிவித்தார்.
கிட்டத்தட்ட விஜய் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரும் ஒரே கருத்தை கூறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.