Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுவில்லா தமிழகம் அமைக்க இந்த நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்! அன்புமணி ராமதாஸ்

Advertiesment
மதுவில்லா தமிழகம் அமைக்க இந்த நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்! அன்புமணி ராமதாஸ்
, திங்கள், 2 அக்டோபர் 2023 (11:40 IST)
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த  நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் காந்தியடிகளின் தியாகத்தை போற்றி வரும்  நிலையில்,  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த நாளில் இந்திய விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூறுவோம். இந்தியாவில் அனைவருக்கும் கல்வி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை, மது வணிகம் மட்டும் கூடவே கூடாது என்று மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தினார்,

கல்வி வளர்ச்சிக்காகவும் கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் ஆயிரம் திட்டங்களை செயல்படுத்தினாலும் கூட மதுவின் தீமையால் மற்ற சாதகமான விஷயங்கள் பயனற்றுப் போகின்றன. எனவே காந்தியடிகளின் வழியில் மதுவில்லா தமிழகம் அமைக்க இந்த நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்!’’என்று தெரிவித்துள்ளார்.

 
webdunia
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,

‘’நேர்மை, கண்ணியம், உண்மை என உயர்ந்த நெறிகளை அனைவருக்கும் கற்பித்து, வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த மகான்,
 
இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றி அறப்போராட்டங்களை முன்னெடுத்து வென்றவர்,
 
நாட்டில் சமத்துவமும், அகிம்சையும் மேலோங்கப் பாடுபட்ட தியாகச் செம்மல், இந்திய மக்கள் நேசிக்கும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளில் அவரின் தியாகத்தையும்,  பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை. பரபரப்பு தகவல்..!