Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டுகளை திறந்து வைத்தார் - தொல் திருமாவளவன்!

J.Durai
செவ்வாய், 16 ஜூலை 2024 (14:50 IST)
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  ஆவட்டி கல்லூர்  நான்கு முனை சந்திப்பில் அமைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வெட்டுகளை திறந்து வைத்து 55 அடி  கொடிக்கம்பத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவருமான தொல். திருமாவளவன் திறந்து வைத்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். 
 
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றியை கொண்டாடும் விதமாக ஆவட்டிக் கல்லூர் நான்கு முனை சந்திப்பில் கல்வெட்டு பதித்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.
 
இந்நிகழ்வில் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வீர திராவிட மணி கட்சி நிதியாக ஐம்பதாயிரம் ரூபாய்  வழங்கினார்.
 
மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் ஊக்கத் தொகையும் கொடுத்து கௌரவப்படுத்தினார் திருமா.
 
பின்னர் கட்சி நிர்வாகிகளுக்காக  எழுச்சி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீர திராவிட மணி  தலைமை தாங்கினார்.  
 
மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் கல்லூர் ஆவட்டி ,பொடையூர்  ஆலம்பாடி பகுதியில் உள்ள கட்சியின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments