Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கல் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது குறித்து ஈபிஎஸ்..!

Advertiesment
ஈபிஎஸ்

Siva

, செவ்வாய், 16 ஜூலை 2024 (14:32 IST)
கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர்  அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன,இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
 
முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி திரு. செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. 
 
அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்!
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமுதா, ராதாகிருஷ்ணன் உள்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. முழு விவரங்கள்..!