Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியின் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்

Advertiesment
மனைவியின் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்

Prasanth Karthick

, திங்கள், 21 அக்டோபர் 2024 (13:28 IST)

பிரபல யூட்யூபரான இர்பான் தனது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

 

யூட்யூபில் பிரபல Food Vloggerஆக இருப்பவர் இர்பான். இவருக்கு ஏராளமான ஃபாலோவர்கள் உள்ள நிலையில் சமீபமாக அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களையும் அழைத்து வீடியோ வெளியிட்டு மேலும் புகழ்பெற்றார்.

 

ஆனால் புகழ்பெற்ற அளவுக்கு தற்போது சர்ச்சைக்கும் உள்ளாகி வருகிறார் இர்பான். முன்னதாக கார் விபத்து ஏற்படுத்தியது, தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலியல் அடையாளத்தை வெளியிட்டது உள்ளிட்டவற்றால் இர்பான் சர்ச்சையில் சிக்கினார்.

 

இந்திய சட்டப்படி கருவில் உள்ள குழந்தையின் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்துவது தவறு என்பதால் இந்த விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டு வீடியோவை நீக்கினார். 
 

 

இந்நிலையில் தற்போது தனது மனைவிக்கு பிரசவம் நடக்கும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான். குழந்தை பிறக்கும்போது அதன் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் பகிர்ந்திருந்தார்.

 

ஆனால் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! எங்கேயிருந்து புறப்படும்? - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!