ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி தளத்திற்கு செல்ல இருந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய துணை குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி அகாடமியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக ஊட்டி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மோசமான வானிலை நிலவுவதால் இந்த பயண திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவையிலேயே தங்கியுள்ள வெங்கையா நாயுடு நாளை ஊட்டிக்கு செல்வார் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.