Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்து மன்னிப்பு கடிதம்: திருடர்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம்?

Advertiesment
idols
, செவ்வாய், 17 மே 2022 (10:50 IST)
திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்து மன்னிப்பு கடிதம்: திருடர்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம்?
திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்துவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற திருடர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பழங்கால கோவில் ஒன்றில் 16 சிலைகளை சமீபத்தில் கொள்ளை கும்பல் ஒன்று திருடி சென்றது 
 
300 ஆண்டு பழமையான பாலாஜி கோவிலுக்கு சொந்தமான இந்த சிலைகள் பெரும் விலை மதிப்பு கொண்டது 
 
இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் திருடப்பட்ட 16 சிலைகளில் 14 சிலைகளை மீண்டும் திரும்ப வைத்து விட்டு அதன் அருகே மன்னிப்பு கடிதம் ஒன்றையும் திருடர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ளனர் 
 
அந்த கடிதத்தில் இந்த சிலைகளை திருடியதிலிருந்து தாங்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும் கெட்ட கனவுகள் ஆட்டி படைக்கின்றது என்றும், கடவுள் கனவில் வந்து பயமுறுத்தியதாகவும் கூறியுள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்தால் ரூ.1500 கோடி வருவாய்: ரயில்வே அமைச்சகம்