Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூரில் தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

வேலூரில் தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
, புதன், 17 ஏப்ரல் 2019 (17:45 IST)
கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  
அதன் பின்னர் காட்பாடியில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என அப்போது முதலே யூகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.  
 
இதற்கு ஏற்றார் போல், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று தற்போது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மேலும், காலை 10 மணிக்கு மேல் அவசர வழக்காக இதை விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். 
 
அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெறுக என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது தேர்தல் ரத்துக்கு எதிராக வேட்பாளர்கள் இதில் அதிமுக ஏசி சண்முகம்,  , சுயேட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று மாலை 4:30 மணிக்கு  தீர்ப்பளிப்பதாக தகவல் வெளியானது.
 
இன்று வெளியான தீர்ப்பின்படி வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
 
இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து நீதிபதிகள் இன்று தீர்ப்பை வெளியிட்டனர். அதில் வேலூர் தொகுதியில் வேட்பாளர் ஏ.சி சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழைப்பழத்துக்குதான் முதல்வர் காசு கொடுத்தார் – தேர்தல் அதிகாரி அடடே பதில் !