வேளாங்கண்ணியில் இருந்து திருப்பதி மற்றும் எர்ணாகுளத்திற்கு ரயில்கள் விட வேண்டும் என்று பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து திருப்பதிக்கு ஒரு புதிய ரயில், எர்ணாகுளத்திற்கு ஒரு புதிய ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு:
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில்கள் வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.
மேலும் திருப்பதி - கொல்லம் இடையே வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் விரைவு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும்.