கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு அதிமான நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து சமீபத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டன.
நேற்று முதல் அங்கு கடைகள் செயல்பட தொடங்கிய நிலையில், 450 லாரிகளில் சுமார் 6000 டன்கள் வரை காய்கறிகள் வந்துள்ளதாகவும் இந்த காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைய ஆரம்பித்துள்ளது.
காய்கறிகளின் விலை ;-
தக்காளி - ரூ 10
உருளைக்கிழங்கு -ரூ 25
பெரிய வெங்காயம் -ரூ 15
கத்தரிக்காய் - ரூ 20
வெண்டைக்காய் -ரூ 25
முள்ளங்கி -ரூ 20
பீன்ஸ் - ரூ 60
அவரைக்காய் - ரூ 30
கேரட் - ரூ 20
பீட்ரூட் - ரூ 20
புடலங்காய் - ரூ 20
பச்சை மிளகாய் -ரூ 20
இஞ்சி - ரூ 50