Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் தொடங்கியது திருமழிசை காய்கறி சந்தை: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

இன்று முதல் தொடங்கியது திருமழிசை காய்கறி சந்தை: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
, திங்கள், 11 மே 2020 (07:13 IST)
இன்று முதல் தொடங்கியது திருமழிசை காய்கறி சந்தை
கோயம்பேடு காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து சமீபத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.
 
இந்த நிலையில் காய்கறி மொத்த வியாபாரிகளுக்காக திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த காய்கறி சந்தையிஅ பார்வையிட்டனர்
 
இந்த நிலையில் இன்று முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கியுள்ளது. ஏ,பி,சி,டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த காய்கறி சந்தை நடைபெற்று வருவதாகவும் மொத்தம் 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தைக்கு முதல் நாளே 450 லாரிகளில் சுமார் 6000 டன்கள் வரை காய்கறிகள் வந்துள்ளதாகவும் இந்த காய்கறி சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது
 
இன்றைய முதல் நாளில் திருமழிசை காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை விவரம் பின்வருமாறு
 
தக்காளி ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.14, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.25, பீட்ரூட் ரூ.30, பாகற்காய்-25, கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி ரூ.25

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி: பெரும் பரபரப்பு