Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ஜினியரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரம் செய்யும் இளைஞர் கொலை!

Advertiesment
என்ஜினியரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரம் செய்யும் இளைஞர் கொலை!
, ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:41 IST)
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காய்கறி வியாபாரம் செய்யும் இளைஞர் காதலித்து வந்த நிலையில் திடீரென அந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜி என்பவர் பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் அங்கு உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர் 
 
அதன்பின் மறுநாள் ஊருக்குத் திரும்பியபோது ஊர் பெரியவர்கள் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மூன்று மாதம் கழித்து முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் அதுவரை மாணவி அவரது பெற்றோர் வீட்டில் இருப்பார் என்றும் பேசி முடித்தனர் 
 
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பெங்களூரில் காய்கறி வியாபாரம் நடத்த முடியாத நிலையில் வருமானத்துக்கு வழி இல்லாமல் விஜி தவித்துள்ளார். இதனை அடுத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவியின் தந்தை தன்னுடன் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம், ஊருக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்
 
இதனையடுத்து மறுநாள் விஜி ஊருக்கு வந்த நிலையில் மர்மமான முறையில் மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில் சாலையோரம் பிணமாக கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவியின் தந்தை உள்பட அவரது குடும்பத்தினருடன் இதுகுறித்து விசாரித்து வருவதாக தெரிகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: கொரோனா மரணங்களில் இந்தியா 5-வது இடம்