Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்..

Advertiesment
வீரப்பன்

Arun Prasath

, சனி, 22 பிப்ரவரி 2020 (15:42 IST)
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி கிருஷ்ணகிரியில் பாஜகவில் இணைந்தார்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய எல்லை வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக யானை தந்தங்களை கடத்தி சட்ட விரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், மேலும் போலீஸ், வனத்துறையினர் உள்ளிட்ட 180 பேரை கொலை செய்த குற்றத்திற்காகவும் சந்தன கடத்தக் வீரப்பனை பிடிக்க ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு, தர்மபுரி பாப்பாரப்பட்டி கிராமத்தில் அதிரடி படையிடம் சிக்கிய வீரப்பன் மற்றும் அவரது குழுவினர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். அதற்கு அதிரடி படையும் திரும்ப சுடவே, சம்பவ இடத்திலேயே வீரப்பன் உயிரிழந்தார்.

இந்நிலையில் வீரப்பனின் இரண்டு மகள்களில் ஒருவரான வித்யா ராணி, கிருஷ்ணகிரியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். வித்யா ராணி தற்போது வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலத்தை உலுக்கிய சைக்கோ கொலைகாரன் கைது!